நாம் நமது வாடிக்கையாளர்களுடைய எண்ணத்திற்கு ஏற்ப, அவர்களுக்கு நமது படைப்புகளை சரியான தரத்தில் அளித்திடவோண்டும்
(உம்) நீங்கள் mobile phone வாங்க mobile showroom க்கு செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம் ,
உங்களுக்கு தேவையான மாடல்,பட்ஜெட்,நேர்த்தி,தரம் மற்றும் உத்தரவாதம் இவை அனைத்தும் ஒருசேர பார்க்கும் நாம்,நமது வாடிக்கையாளர்களும் நம்மிடையே எதிர்ப்பார்ப்பது நியாயம் தானே.
சில சமயம் நாம் internet – ல் பார்த்து, பிடித்துவிட்டால் mobile phone ஐ online ல் வாங்கிக்கொள்கிறோம்
ஆனால் இதுவரையில் பலரும் நம் தொழில் வளர ஒரு வலைதளம் உருவாக்காமல் இருக்கின்றோம்
நம்முடைய வாடிக்கையாளர்களும் சமூக வலை தளங்களில் சிறந்த புகைப்பட கலைஞர்களை தேடிக் கொண்டிருக்கிறார்கள்
ஆகையால் உங்களுக்கு இந்தியாவில் எந்த பகுதியிலிருந்தும் ஆர்டர் வரலாம்.
அதற்கு நீங்கள் செய்யவேண்டியது,உங்களுக்கென ஒரு வலைதளம் அமைத்துக்கொள்ள வேண்டும்.கொஞ்சம் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழி தெரிந்திருந்தால் நல்லது
சரி mobile வாங்கிவந்துவிடுகிறீர்கள்,அதை உபயோகிக்கிறீர்கள்,உங்களுக்கு பிடித்துவிட்டது,இப்பொழுது நீங்கள் என்ன செய்வீர்கள்?
இது latest mobile இதில் எல்லா சிறப்பு அம்சங்களும் இருக்கின்றன என கூறி மற்றவர்களையும் வாங்க தூண்டுவீர்கள்.
அதைப்போல நாம் செய்யும் நேர்த்தியான சேவை மற்றும் latest album,video வை பார்த்து அவர்களும் மற்றவர்களுக்கு,குறைந்தது 10 நபர்களிடமாவது நமது பெறுமைகளை கூறுவார்கள்,இது நமக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.
பிறகு நாம் வாங்கிய அந்த mobile லை எந்த பிரச்சினைகளும் இல்லாமல் தொடர்ந்து உபயோகிக்கும் போது அதை மாற்ற நமக்கு மனம் வராது,
தொடர்ந்து இதையே வைத்துக்கொள்ளலாம் என்றேத்தோனும்.
ஆகையால் நாமும் நமது தொழிலை நேர்தியாக கொண்டு போவோமானால்,நம்மை யாரும் மறக்கவும் மாட்டார்கள் மாற்றவும் மாட்டார்கள்.
நாம் எண்ணியதுபோல் நம்முடைய தொழில் தொடர்ந்து முன்னேற்றமடையும்
இதை புரிந்துக்கொள்ளவது மிக எளிது : நீங்கள் எதையெல்லாம் மற்றவர்களிடம் எதிர்பார்க்கீறீர்களோ, அதையே மற்றவர்களும் உங்களிடத்தில் எதிர்பார்க்கிறார்கள்.
இதை புரிந்துகொண்டால் நீங்கள், உங்கள் தொழிலை அடுத்தது நிலைக்கு கொண்டுசெல்லலாம்.
அடுத்த நிலைக்கு உங்கள் புகைப்பட தொழிலை கொண்டுசெல்ல வேரு சில உத்திகளும் உண்டு.
அவையென்ன என்பதை அடுத்த சில நாட்களில் ஆராய்வோம்……..
உங்களுடன் பயணிக்க நாங்களும் இருக்கிறோம். தொடர்புக்கு
www.photokaaran.com Team – 9791162927
மிகவும் பயனுள்ள தகவல்… நன்றி…