புகைப்பட தொழிலை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல நாம் அனைவரும் smart work செய்ய வேண்டும், அதாவது எளிமையான முறையில் மிக தரத்துடன் செய்ய வேண்டும்

Home » Uncategorized » புகைப்பட தொழிலை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல நாம் அனைவரும் smart work செய்ய வேண்டும், அதாவது எளிமையான முறையில் மிக தரத்துடன் செய்ய வேண்டும்

screen-shot-2016-10-03-at-10-22-32-amscreen-shot-2016-10-03-at-10-22-26-am screen-shot-2016-10-03-at-10-22-38-amநாம் சுப நிகழ்ச்சிகளில் எடுக்க பட்ட வீடியோ மற்றும் போட்டோ வை எடிட்டிங் செய்வதிலோ அல்லது ஆல்பம் டிசைன் செய்வதிலோ நமக்கு தேர்ச்சி இருக்க வேண்டும் அதே சமயத்தில் குறுகிய நேரத்தில் ஒரு வேலையை முடித்திடவேண்டும்
இன்று செய்ய வேண்டிய வேலையை நாளை என்று தள்ளி போடுவதனால் நாம் அனைவரும் மன உலச்சலுக்கு ஆளாகிறோம்.நம் தலைமீது பாரத்தை சுமந்துகொண்டு இருப்பதை போலவே உணர்வோம்
இந்த வேலையை தொடங்கினால் இத்தனை மணிநேரமாகுமே,இத்தனை நாட்கள் ஆகுமே என்று நினைத்தாலே போதும் ஒருவேலையும் ஆகாது. காரணம் smart work தெரியாததால்.
இந்த smart work க்கு,நமக்கு computer மற்றும் software கள் தேவை படுகின்றன, அவைகள் எது நமக்கு சாதகமாக இருக்கும் என ஆராய்ந்து கண்டு பிடித்துக் கொள்ள வேண்டும்.
அப்பொபொழுது தான் நேரம் மிச்சமாகும், வரவு இரட்டிப்பாகும்.
இல்லையென்றால் நாளடைவில் இதவே நமது தொழில் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும்.
இந்த பாதகமான நிலையை தவிர்க நமக்கு 90% வாய்ப்பு இருக்கிறது, மீதி 10% சந்தர்ப்ப சூழ்நிலை எனும் இயற்கையிடம் இருக்கிறது என்பதே நிதர்சனம்.
(உ.ம்) – காலையில் உஙகள் studio க்கு புறப்பட தயாராகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.
அந்த சமயத்தில் உங்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது,
எதிர்முனையில் –
இரண்டு மாதம் ஆச்சி, எப்பப்பா ஆல்பமும், வீடியோவும் தருவீங்க? வீட்ல கேட்டுகிட்டே இருக்காங்கபா… என்று,
உங்களுக்கு தர்மசங்கடமாகிறது, சாக்கு போக்கு சொல்லி,சமாளித்து 10 நாள்ல தந்துவிடுகிறேன் என கூறி செல்போனை வைத்து விடுகிறீர்கள்
இது இயற்கை இதை உங்களால் தடுக்கமுடியாது.
இதன்பிறகு நீங்கள் எப்படி REACTION (எதிர்வினை) பண்ணுவீர்கள் என்பது தான் முக்கியம்.
உங்களுக்காக உங்கள் மனைவி சமைத்து வைத்த சிற்றுண்டியை தவிர்த்துவிடுகிறீர்கள். உங்கள் மனைவி கோபப்படுகிறாள்,பதிலுக்கு நீங்கலும் கோபப்படுகிறீர்கள்.இதை பார்த்துகொண்டுயிருந்த உங்கள் குழந்தை அழுகிறது.
போயிட்டு வருகிறேன் என்று கூட கூறாமல் பைக்கை வேகமாக உங்கள் கடைக்கு ஓட்டிசெல்கிறீர்கள், வழியில் ஹெல்மெட் போடாததால் போலிஸ்காரரிடம் அபராதம் செலுத்துகிறீர்கள்.
உங்கள் ஸ்டுடியோக்கு வருகிறீர்கள், வந்த பிறகு தான் தெரிகிறது நீங்கள், உங்கள் மொபைல் போனை கொண்டுவர மறந்து விட்டீர்கள் என்று…
அன்றைய நாள் முழுவதும் உங்களுக்கு எதிர்மறை யாகவே நடக்கிறது.
காரணம், காலையில் உங்களுக்கு தொலைபேசி அழைப்பு வந்தபிறகு நீங்கள் நடந்து கொண்ட விதம் தான்.
அன்றைய நாள் முழுவதும் உங்களுக்கு குழப்பமாகவே போனதற்கு யார் காரணம் ?
தொலைபேசியில் அழைத்தவரா ?
கோபப்பட்ட உங்கள் மனைவியா ?
அபராதம் விதித்த போலிஸ்காரா ?⁠⁠⁠⁠
நீங்களா ?

ஆம், நீங்கள் தான்…
உங்களுக்கு வந்த தொலைபேசி அழைப்பை கட்டுப்டுத்த முடியாது, எப்படியிருந்தாலும் உங்கள் வாடிக்கையாளருக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது. உங்கள் வேலையை குறுபிட்ட காலத்தில்,விரைவாக முடிக்காமல் தள்ளிளிக்கொண்டே போய்விட்டீர்கள்.
ஆனால் தொலைபேசியில் பேசிய பிறகு நீங்கள் நடந்து கொண்ட விதம்தான் காரணம்.
அதுவே நீங்கள், உங்கள் வாடிக்கையாளரிடம் – ஆல்பம் மற்றும் வீடியோ இன்று மாலைக்குள் தந்துவிடுகிறேன் என்கிறீர்கள், அதற்கு அவர் – வாருங்கள்,வந்து கொடுத்துவிட்டு மீதி பணம் வாங்கிக்கொள்ளுங்கள் என்கிறார்.
சரி என்று கூறிவிட்டு மொபைலை உங்கள் pocket ல் வைத்துகொண்டு மனைவி சமைத்த சிற்றுண்டியை சாப்பிட்டு,குழந்தைக்கு சந்தோசமாக Bye சொல்லிட்டு, உங்கள் ஸ்டுடியோக்கு ஹெல்மெட் அணிந்து கொண்டு பைக்கை ஓட்டிசெல்கிறீர்கள்.
அன்றைய நாள் முழுவதும் நீங்கள் உற்சாகமாக உணர்வீர்கள்.
இரண்டுக்கும் வித்தியாசத்தை பார்த்தீர்களா – ஒரே மாதிரி தொடங்கின, ஆனால் வெவ்வேறு விதமாக முடிந்தன.
ஏனென்றால், நீங்கள் நடந்து கொண்டவிதம்
உங்கள் தொழில் முறையில் நடைபெறும் 10% சம்பவங்களை உங்களால் கட்டுபடுத்தமுடியாது, ஆனால் மீதி 90% ல் நீங்கள் எப்படி நடந்து கொள்கிறீர்கள் என்பதில் தான் இருக்கிறது.
இதை பயன்படுத்தி பாருங்கள், உங்கள் தொழிலை, வளர்ச்சி பாதைக்கு கொண்டுசெல்லலாம்.
நம் வளர்ச்சிக்கு 90% வாய்ப்பிருந்தும் நாம் எமாற்றபடுகிறோம்,
அது யாரால் என்று, வரும் நாட்களில் ஆராய்வோம்….!!?
உங்களுடன் பயணிக்க நாங்களும் இருக்கிறோம். தொடர்புக்கு
www.photokaaran.com Team – 9791162927

Leave a Reply